செம்முள்ளி
Home \ semmulli \ அவள்

அவள்

முகந் தாமரை, நுதல் பிறை,
வில் லிமை, வேல் விழி,

செவ் விதழ், முத்துச் சிரிப்பு,
மெல்லிசைக் குரல், அமுது பேச்சு,

கூந்தல் அடவி, தென்றல் அதனசைவு,
துடி யிடை, மூங்கில் தேகம்,

தேர் நடை, நேர் உடை,
காஞ்சனம் மேனி, எழில் மின்னல்,

கோபம் வீழ்கதி, நெருக்கம் கடுங்குளிர்,
பேரன்பு பெருவானம், பிடிவாத குணவதி,

நெஞ்சம் அயில், எண்ணம் தேனீ,
அரிவைப் பருவம், பேதை இயல்பு.