செம்முள்ளி
Home \ semmulli \ என்றேனும்

என்றேனும்

தனித்திருந்திடும்போதோ, பிறர்
தவிர்த்திடும்போதோ

என்றேனும் மங்கிய நிலையில் என் நினைவுகள் தோன்றலாம்.

சுமை சேர்ந்திடும்போதோ,
சுகம் தேய்ந்திடும்போதோ

என்றேனும் மங்கிய நிலையில் என் நினைவுகள் தோன்றலாம்.

பணி கூடிடும்போதோ,
பனி வாட்டிடும்போதோ

என்றேனும் மங்கிய நிலையில் என் நினைவுகள் தோன்றலாம்.

பொல்லாங்கு தோழி கைவிரித்திடும்போதோ,
பொதுவாய் நீ ஊர் திரும்பிடும்போதோ

என்றேனும் மங்கிய நிலையில் என் நினைவுகள் தோன்றலாம்.

அழகு நீயென யாரும் கூறக்கேட்கையிலோ,
நீயே உன்னை வியந்து இரசிக்கையிலோ

என்றேனும் மங்கிய நிலையில் என் நினைவுகள் தோன்றலாம்.

நகரும் படிக்கட்டில் ஏறிடும்போதோ,
கண்ணாடிகள் சூழ் மின்தூக்கியில் நுழைந்திடும்போதோ

என்றேனும் மங்கிய நிலையில் என் நினைவுகள் தோன்றலாம்.

மலர்ந்து மணம் வீசும் மல்லிகை சூடிடும்போதோ,
மகேசன் திருக்கோயில் வாயில் மிதித்திடும்போதோ

என்றேனும் மங்கிய நிலையில் என் நினைவுகள் தோன்றலாம்.

முண்டியடித்திடும் பேருந்தில் ஏறிடும்போதிலோ,
இரயில் நிலைய இருள்சூழ் இருக்கையை பார்த்திடும்போதிலோ