செம்முள்ளி
Home \ semmulli \ மீன்விழியாள்

மீன்விழியாள்

மூன்றாம் பாலை
மொத்தம் குடித்த பெருங்கடல்,

பார்த்த நொடியில்
ஆளை விழிங்கிடும் முக்கோண தேசம்,

தூண்டில் தூக்கித் திரியும்
ஒன்றாய் பிறந்த இரட்டைப் பிறவி,

மீளா இன்பம் தரும்
விண்மீன்களும், நான் நாளும்
காணத்துடித்திடும் விடிவெள்ளியும் அதுவே,

மதியென்பர்,
மதியை மயக்க வல்லதென்பேன்,

கருந் திராட்சையென்பர்,
அது நொதித்து கிடைத்த இரசமென்பேன்,

கயல்விழி உவமைக்கு பொருள் சேர்க்கும்
உன் நீர் கோர்த்த விழிகளைப் பாட

கற்று வைத்த கொஞ்ச தமிழும், கொஞ்சல் தமிழும்
சேர்த்து வைத்தும் வார்த்தைக்குத்தான் பஞ்சம்