செம்முள்ளி
Home \ semmulli \ விடியாப்பொழுது

விடியாப்பொழுது

இதோ இந்தக் கிழக்கு விடிந்தும்,
மனம் விடியல் தேடி ஏங்கி நிற்கிறது,

உன் முதல் அழைப்புத்தானே என் விடியலாயிருந்தது.

சிலிர் காற்று வீசிட்ட கூந்தலும்,
மெல்லிசையாய் ஒலித்திட்ட உன் குரலுமின்றி
மனம் வேறு எதை ஏற்கும் ?
இதை ஏங்கித்தான் எத்தனை காலம் போகுமோ ?

நான் சூடக் கொடுத்திட்ட பூக்கள் வாடிய போல்,
நாம் உறவாடிய பொழுதுகளும் வாடி மறைந்து போகுமோ ?

உனைக் காணாமல் என் நாளும் சுகம் காணுமோ ?

ஒடுங்கிக் கிடக்கும் தனித்த மனமோ சிரித்துப் பேசி
சாய்ந்திட உன் தோள்களைத்தான் பெறுமோ ?