செம்முள்ளி
Home \ semmulli \ ஏக்கம்

ஏக்கம்

என் இன்னுயிரே,
உயிர்தனை பிழைப்பித்திடும் சுவாசக்காற்றே,
ஒப்பில்லா பேராற்றலே, சுடர்மிகு பேரறிவே,
என்னிருள்மிகு இரவின் மறையா ஒற்றை பெண்ணிலவே,

உன் கடைக்கண் பார்வையும் மோட்சமடி,
அயலார் நோக்க வேண்டி, நீ நோவதுமேனடி ?
காற்றில் முறியும் முருங்கையென, நீ மனம் கொண்டதேனடி ?
சுட்டுவிரலில் இராணுவம் கொண்ட அதிகாரமே,
கருப்பு, வெள்ளை வண்ணம் குழைத்த உன் பொன்விழிகள் ததும்புவதேனடி ?

அத்திவலைகளும் தரைதனைத் தொடின்,
துடைத்திடா என்னிரு கரங்களையும் துறவேன்,
அரணென நானிருந்தும், வெறுத்தும், விடுத்தும் போவதேனடி ?
நீ ஏற்கா பாசம் சமைத்தும், மதிப்புண்டோ அதற்கு ?