அம்மு

பேதையவள் அரி கொண்டு,
பேரிளம்பெண் அறி கொண்டு,
வசம் தூவும் பெண்ணல்லோ இவள்,
இவளாரோ, இவளாரோ மின்மினி.

காவிரி கரையினில்,
செம்முள்ளி நிறைகையில்,
பூத்த வளல்லோ இவள்,
இவளாரோ, இவளாரோ மின்மினி.

இவளி டத்தே நறு பெரும் காற்று,
மனமோடும் அந்நாடம் பின்னே,
மனம் தினந்தேடும் பொன்னான பொண்ணு.

மயிற்கொன்றை செழிப்போடும்,
கிளியாரின் பேச்சோடும்,
வைரக்கல் கண்ணாடி மூக்கில்,
நென்மணி சூடி நிற்கும்,
வைரமணி வெண்பனியை,
சொன்னாரில்லை யாரும் கனவில்

கண்டேனென்றோ, கேட்டேனென்றோ
முல்லை பூவென குலுங்கிடு மிப்பெண்ணை
நற்சிறிப் புதட்டில் பொதிந்திட்டு,
விழிநீரும் மறைத்திட்டு,
கனவின் வழி செழித்தொழுகு மருணி,
நெஞ் சுர முள்ள, மலைநாடன் பொண்ணு.

பிறை நுதலில் சுருள் முடியை,
துறுத் துருகி பார்த்திருந்து,
உவகை கொள்ளு மணமுள்ள காற்று.
தரை நடுங்கும் மார்கழியில்,
குளிரெடுத்த குயில்கள்,
கூட்டாக பாடிடும் அழகை .

பொன்னும் இவளே,
பொருளும் இவளே,
விடியும் மட்டும் ஒளிரும் மதியுமிவளே.

அவள் கொடி போல வளைந்திட்டு,
தொடு விரலில் கோதிட்டு,
இடை மேலே கைகட்டி நிற்கும் பொண்ணு,
நல்ல மணவாட்டி குணமுள்ள பொண்ணு.

[ பேதை = குழந்தை, அரி = மென்மை, பேரிளம்பெண் = மூத்தவள், அறி = அறிவு, வசம் = வசீகரம், செம்முள்ளி = டிசம்பர் பூ, நறு = வாசம், மயிற்கொன்றை = பூ வகை, பிறை = நிலவின் பிறை, நுதல் = நெற்றி, மணவாட்டி = மணப்பெண் ]

PS: Inspired by Idukki song from the movie Maheshinte Prathikaaram.